• Wed. Feb 12th, 2025

சேலம் அருகே குப்பையில் வீசப்பட்ட பெண்குழந்தை..!

Byமதன்

Jan 18, 2022

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்குப் பக்கத்தில் பிறந்த பெண்குழந்தை ஒன்று குப்பையில் வீசப்பட்டிருப்பதைக் கண்டு அனைவரையும் பதற வைத்திருக்கின்றது.

குழந்தையில்லாமல் எத்தனையோ குடும்பம் கணவன் மனைவி பிரிந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். காரணம் நமக்கு வாரிசு இல்லையே, குழந்தை இல்லையே, அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சிறு வியாபாரிகள் முதல் பணக்காரர்கள் வரை வாழ வேண்டும் என்று பல்வேறு மருத்துவமனைக்குச் சென்று குழந்தை பெற்று எடுக்கின்றனர்.

ஆனால் வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காகிதப்பட்டறை எல்.ஐ.சி.காலனி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே பச்சிளம் பெண் குழந்தை குப்பையில் வீசப்பட்டு கிடந்தது. குழந்தையை வீசிச் சென்ற தாய் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இப்படிப்பட்ட குடும்பத்தினர் யாரென்றும், ஒரு பச்சைக்குழந்தை என்றும் பாராமல், குப்பைத் தொட்டியில் வீசியது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்கிறார்கள்.