மதுரையில் பீஸ் பவுண்டேஷன் மற்றும் பீஸ்நிக்காஹ் மேட்ரிமோணியின் சார்பில், ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் ஏழை எளியோருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
மதுரை சர்வேயர் காலனி பகுதியில் அமைந்துள்ள பீஸ்பவுண்டேஷன் மற்றும் பீஸ்நிக்காஹ் மேட்ரிமோனியின் தலைமை அலுவலகத்திலும் மற்றும் மேலூர் அருகே கொட்டக்குடி கிராம மனை அலுவலகத்தில் பீஸ் பவுண்டேஷன் பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் நிறுவனர் முகமதுபாரூக் ,மாணிக்கவாசகம், ஆகியோர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் ஏழை எளியோருக்க ஒவ்வொரு ஆண்டும் நமது நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் நமது பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனி & பீஸ் பவுண்டேஷன் சார்பாக தீபாவளி கொண்டாடும் கஷ்டப்படக்கூடிய ஏழை, எளிய மக்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்களாக (அரிசி, மளிகைப்பொருட்கள் கணவனை இழந்த பெண்களுக்கு உதவி தொகை) ஆகியவைகளை 200க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது பரிசுப் பொருட்களைப் பெற்ற ஏழை, எளிய மக்கள் மகிழ்ச்சி பொங்க சென்றனர். இந்நிகழ்வில் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.