• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சைகை போராட்டம்..!

Byகுமார்

Dec 27, 2021

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காதுகேளாதோர், வாய்பேசாதோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.


மதுரை மாவட்டத்தில் உள்ள காது கேளாதோர், வாய் பேசாதோர்கள் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்நிலையில் காது கேளாதோர், வாய் பேசாதோர்களுக்கு இலவச வீடுகள் கட்டிதர வேண்டும், இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது காவல்துறையினர் துன்பறுத்தவதால் அவர்களுக்கான ஓட்டுனர் உரிமம் வழங்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தில் உள்ள 5சதவித ஒதுக்கீட்டை முறைகேடின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி காது கேளாதோர், வாய் பேசாதோர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சைகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளை அசைத்து சைகை மூலமாக வலியுறுத்தி போராடினர். காது கேளாதோர், வாய் பேசாதோர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் குடியிருப்பு ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடு நடைபெறுவதாகவும், வாய் பேச முடியாதோரை காவல்துறையினர் துன்பறுத்துவதகவும் குற்றம்சாட்டினர்.

பைட்-1 திரு.பாண்டி – காது கேளாதோர் , வாய் பேசாதோர்கள் பாதுகாப்பு சங்கம்.