• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு சிக்கலா.? விளக்கமளித்த தேவஸ்தானம்

Byகாயத்ரி

Sep 12, 2022

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனத்திற்கு வந்தபடி உள்ளனர். தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுவது திருப்பதியில் வழக்கமாக உள்ளது. திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பதி வரும் சர்க்கரை நோய் உள்ள பக்தர்களையும் கணக்கில் கொண்டு அவர்களுக்காக இனிப்பு குறைவான லட்டுகளை உற்பத்தி செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. அவ்வாறு செய்தால் திருப்பதி லட்டுக்கு வழங்கப்பட்ட புவிசார் குறியீடு சிக்கலுக்கு உள்ளாகும் என்று சிலர் பேசி வந்தனர். இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம், சர்க்கரை நோயாளிகளுக்காக இனிப்பில்லாத லட்டு செய்ய உள்ளதாக பரவி வரும் தகவல்கள் பொய்யானவை என்றும், திருப்பதியில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் ஆண்டாண்டு காலமாக எப்படி செய்யப்படுகிறதோ அதே முறையில்தான் தொடர்ந்து செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.