கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் அதிமுக சார்பில், வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதிமுக, மற்றும் திமுக கட்சிகள் இரண்டு பிரிவுகளாக இருக்கும் நிலையிலும், பன்னெடும் காலமாக இரண்டு கட்சிகளின் மாணவர் பிரிவின் சார்பில், தனித்தனியாக நடத்தப்படும் பொதுக்கூட்டம் வீரவணக்க பொதுக்கூட்டம்.
கொட்டாரத்தில் அதிக சார்பில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு, மாணவர் அணி செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். கொட்டாரம் பேரூர் கழகச் செயலாளர் ஆடிட்டர் சந்திர சேகரன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் அதிமுக சார்பில் தலைமை கழக பேச்சாளர் வடுகப்பட்டி சுந்தரபாண்டியன், கழக கலைப்பிரிவு இணைச்செயலாளர் திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்.
குமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் பங்கேற்காத சூழலிலும், இரண்டு ஒன்றிய செயலாளர்களாக தாமரை மகேஷ், ஜெஸீம் ஆகியோர் பொதுக்கூட்டத்திற்கு திரளாக கட்சியினர் களை பங்கேற்க செய்திருந்தார்கள்.
மாணவர் அணி தலைவர் பார்த்தசாரதி, தெற்கு இலக்கிய அவை தலைவர் தம்பி தங்கம், மாவட்ட கழக இணைச்செயலாளர் சாந்தினி பகவதியம்மன் உட்பட கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் திரளாக பங்கேற்று இருந்தார்கள்.









