• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ரயில் நிலையத்தில் ரயில்வே பொது மேலாளர் ஆய்வு…

ByG.Suresh

Nov 29, 2024

சிவகங்கை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார். எம்எல்ஏ, நகர்மன்ற தலைவர் கோரிக்கை மனு வழங்கினார்.

சிவகங்கை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் RN சிங் தலைமையிலான தென்னகரயில்வே துறை அதிகாரிகள் சிவகங்கை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள். சிவகங்கை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள், பயணிகள் தங்கும் அறை ,நடைமேடை தேவையான விளக்குகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் MLA (அதிமுக) , சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த், பாஜக காங் உள்ளிட்ட கட்சியினரும் வர்த்தக சங்கம் சார்பிலும் சிவகங்கை ரயில் நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் நின்று செல்ல வேண்டிய ரயில்கள் குறித்தும் கோரிக்கை மனு வழங்கினார்கள்.

சிவகங்கை வழியாக இராமேஸ்வரம் வரை வந்தே பாரத் இரயில் இயக்கப்பட வேண்டும். செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் சிலம்பு இரயிலை தினசரி இயக்க வேண்டும்.

சென்னையிலிருந்து காரைக்குடி வரை செல்லும் பல்லவன் விரைவு ரெயிலை சிவகங்கை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். மன்னார்குடியிலிருந்து காரைக்குடி வரை சென்று வந்த இரயிலை மீண்டும் இயக்கி சிவகங்கை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.

செங்கோட்டை தாம்பரம், இராமேஸ்வரம் வாரணாசி, இராமேஸ்வரம் அயோத்தியா, இராமேஸ்வரம் – அஜ்மீர், ஹூப்ளி -இராமேஸ்வரம், எர்ணாகுளம் வேளாங்கண்ணி ஆகிய இரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும்.

சிவகங்கை இரயில் நிலையத்தில் மீண்டும் தனி முன்பதிவு நிலையம் (Reservation counter) அமைக்க வேண்டும். சிவகங்கை இரயில் நிலையத்தில் கோச் நிற்கும் இடம் தெரிவிக்க டிஜிட்டல் பலகை வைக்க வேண்டும்.

பார்சல் புக்கிங் வசதி மீண்டும் செயல்பாட்டிற்கு வர வேண்டும். சிவகங்கை ரயில்நிலையம் முதல் நடைமேடையில் மழைக்காலங்களில் மேற்கூரை சேதமடைந்து மழைநீர் ஒழுகுவதால் பயணியர் சிரமப்படுகின்றனர். ஆகையால் நடைமேடைக்கு போதிய அளவில் மேற்கூரை அமைக்க வேண்டும்.

பொதுமக்களின் நலன் கருதி சிவகங்கை இரயில் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். நடைமேடை சிவகங்கை இரயில் நிலையத்தில் தானியங்கி மேம்பாலம் அமைக்க வேண்டும்.

சிவகங்கை இரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.