• Fri. Jan 24th, 2025

வேலடிமடை கிராம மக்கள் போராட்டம்

ByG.Suresh

Dec 4, 2024

கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இளையான்குடி போலீசார் பாரபட்சம் காட்டுவதாக கூறி முற்றுகையிட்டு போராட்டம்

இளையான்குடி அருகே உள்ள வேலடிமடை கிராமம். இங்கு கோவில் வழிபாடு தொடர்பாக இருதரப்பினர் இடையே இருந்து வந்த முன் விரோதம் காரணமாக இருளன் மற்றும் மாதவன் இருவரையும், முப்பதுக்கும் மேற்பட்டோர் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நிலையில், இச்சம்பவம் குறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இது வரை தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்கு பதிவு செய்து இளையான்குடி போலீசார் பாரபட்சம் காட்டுவதாக கூறி, வேலடிமடை கிராம மக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் அடிப்படையில் மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.