• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 28, 2023

1) மலேரியாவைப் பரப்பும் உயிரினம் எது?
அனோபிலஸ் பெண் கொசு

  1. பாஸ்டியர் முறையில் பால் எந்த வெப்ப நிலையில் காய்ச்சப்படுகிறது?
    60 டிகிரி செல்சியஸ்
  2. கண் பார்வைக்குத் தேவையானது எது?
    வைட்டமின் ஏ.
  3. நெல் பயிரிடும் நிலத்திலிருந்து வெளியாகும் வாயு எது?
    மீத்தேன்
  4. எத்தாவரத்தின் இலைகள் உணவாகப் பயன்படுகிறது?
    முட்டைகோஸ்
  5. மரத்தின் வயதை எதைக் கொண்டு அறியலாம்?
    மரத்திலுள்ள வளையங்கள்
  6. குறிஞ்சி மலர் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்கிறது?
    12
  7. உலக அளவில் காற்றாலை உற்பத்தியில் இந்தியா பெறும் இடம் எது?
    4
  8. பூக்களில் எப்பகுதி விதைகளாக மாறுகிறது?
    சூல்கள்
  9. குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் வாயு?
    கார்பன்-டை-ஆக்ஸைடு