• Sat. Apr 20th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 28, 2022
  1. சிறுநீரகத்தின் மேல் அமைந்துள்ள சுரப்பியின் பெயர் என்ன?
    அட்ரினல் சுரப்பி
  2. நாளமில்லா சுரப்பி மண்டலத்தின் தந்தை யார்?
    தாமஸ் அடிசன்
  3. தலைமை சுரப்பி என்றழைக்கப்படும் சுரப்பி எது?
    பிட்யூட்டரி சுரப்பி
  4. இரவு நேரத்தின் பணியினை உணர்த்தும் ஹார்மோன் எது?
    மெலட்டோனின்
  5. காலத் தூதுவர்கள் என்றழைக்கப்படும் ஹார்மோன் எவை?
    மெலட்டோனின்
  6. உடல் வெப்பநிலையை சமநிலையில் பராமரிக்க உதவும் ஹார்மோன் எது?
    தைராய்டு ஹார்மோன்
  7. எந்த திரவத்தில் மூளை மிதந்த நிலையில் உள்ளது?
    மூளைத் தண்டுவடத் திரவம்
  8. மூளையில் உருவாகும் கழிவுகளை சேகரித்து வெளியேற்றும் பணியினை மேற்கொள்வது எது?
    மூளைத் தண்டுவடத் திரவம்
  9. நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல்ரீதியிலான அடிப்படை அலகு யாது?
    நியூரான்கள்
  10. மனித மூளையின் 60சதவீதம் பகுதி எதனால் ஆனது?
    கொழுப்பால் ஆனது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *