• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் !!1 வெளியான புதிய தகவல்

ByA.Tamilselvan

Nov 13, 2022

நடிகர் கவுதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் திருமணம் குறித்து எப்போது என புதிய தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்திலும் நடித்து வருகிறார்.
கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் காதலித்து வந்ததாக செய்தி பரவி வந்ததையடுத்து சமீபத்தில் இருவரும் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்திருந்தனர். இந்நிலையில், கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரின் திருமணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வருகிற நவம்பர் 28- ஆம் தேதி உறவினர்கள் மட்டுமே பங்கேற்கும் கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் நடைபெறுகிறது. பின்னர் நடக்கும் திருமண வரவேற்பில் திரைப்பிரபலங்களை அழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.