

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், சிவன்மலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மலைப்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வருகிற 19.6.2023 முதல் பணிகள் முடியும் வரை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை எனவும், பக்தர்கள் படி வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

