விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு நாடெங்கிலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலம் கொண்டு செல்வது வழக்கம்
அதேபோல் மதுரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் 54 சிலைகள் வைக்கப்பட்டுள்ளது இதில் இந்து முன்னணி இந்து முன்னணி 31 சிலைகளும் இந்து மக்கள் கட்சி 13 சிலைகளும் அனுமன் சேனா 12 சிலைகளும் பிஜேபி 2 சிலைகளும் வைத்துள்ளனர்.

இதேபோல் திருநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்து மக்கள் கட்சி நான்கு சிலைகளும் இந்து முன்னணி இரண்டு சிலைகளும் அகில பாரத அனுமன் சேனா ஒரு சிலையும் பொதுமக்கள் நான்கு சிலைகளும் உள்ளிட்ட மொத்தம் 11 சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 26 விநாயகர் சிலைகளும்.
பெருங்குடி காவல் நிலைத்திற்குட்பட்ட வலையங்குளம் பகுதிகளில் இரண்டு சிலைகளும் பரம்புபட்டி ஒரு சிலையும் பெருங்குடி பகுதியில் ஒரு சிலையும் மொத்தம் நான்கு சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதே போல் சிலைமான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் இருந்து 2 சிலைகளும் பொதுமக்கள் சார்பில் மூன்று சிலைகள் வைக்க காவல்துறை சார்பில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாகமலை புதுக்கோட்டைகாவல் நிலையத்திற்கு உட்பட்ட துவரிமான், மேலக்கால்,வட பழஞ்சி,தென் பழஞ்சி, உள்ளிட்ட 11 இடங்களில் பொதுமக்கள் வைக்க காவல் துறை அனுமதி வழங்கியுள்ளனர்.

விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
வரும் 29, 30, 31, தேதிகளில் இந்து முன்ணணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் விநாயகர் சிலைகள் வினர்ஜனம் (கரைக்க) செய்ய ஊர்வலமாக எடுத்து செல்ல படுவதால்
போலீசார் பாதுகாப்பு பணியிலும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அவனியாபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சிலை வைக்கப்பட்ட கணக்குபிள்ளை தெருவில் ஐயாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் காவல்துறை சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்ட விழா கமிட்டிகளுக்கு பல்வேறு விதிமுறைகள் வழிகாட்டுதல்கள் வழங்கி உள்ளனர்
1 , சிலை வைக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும்
2 ,சிலை வைக்கப்பட்ட பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் தீவிர சோதனை
3 , மத துவேஷங்களை தூண்டும் வகையில் பேசவோ செயல்படவும் கூடாது
4 , ஊர்வலமாக செல்லும் வழிகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இடையரும் ஏற்படாத வகையில் ஊர்வலமாக செல்ல வேண்டும்
5 , ஒலிபெருக்கியில் சாதி,மத பேத மற்ற பாடல்கள் ஒலிபரப்பவும்,
6 , பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அதிக ஒலி எழுப்பாமல் பாடல் ஒலிபரப்ப காவல் துறையினர் அறிவுக்களை வழங்கியுள்ளனர்.
7,கண்காணிப்பு பணியில் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆணையர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.