மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி திருவேடகம் விவேகானந்தா கல்லூரி அருகில் அமைந்துள்ள அருள்மிகு சதுர்வேத கணபதி கோவில் கும்பாபிஷேகம் கடந்த வைகாசி மாதம் இரண்டாம் தேதி நடைபெற்ற நிலையில் கோவிலின் முன்பு மண்டல அபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

கோவில் முன்பு யாக வேள்வி நடைபெற்று நந்தி பகவானுக்கு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சதுர்வேத கணபதிக்கு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது இதில் திருவேடகம் தச்சம்பத்து மேலக்கால் சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கணபதியை தரிசனம் செய்து சென்றனர்.
