ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் 5 நாட்களில் ரூ. 180 கோடி வசூல் செய்துள்ளது.
இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘இந்தியன் 2’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
இந்த நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி , அஞ்சலி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்த ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. ராஜு தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக வெளியான ‘கேம் சேஞ்சர்’, விமர்சன ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்தது. இதனால் படத்தின் வசூலும் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை.
இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 180 கோடி வசூல் செய்துள்ளது படக்குழுவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது மிகவும் குறைவான வசூல் என்றும், ரூ. 450 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் மட்டுமே இப்படம் பிரேக் ஈவன் ஆகும் என்றும் கூறப்படுகிறது.