• Thu. Dec 12th, 2024

காவிரி நதிநீர் உரிமைக்காக அக்.11ல் முழு அடைப்பு போராட்டம்..!

Byவிஷா

Oct 9, 2023

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய காவிரி நதி நீர் உரிமைக்காக, வருகிற அக்டோபர் 11ஆம் தேதியன்று முழு அடைப்பு போராட்டத்தை காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
கர்நாடகாவை கண்டித்து தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முத்தரசன் ஆதரவு அளித்துள்ளார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.