• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வெள்ளிக்கிழமை வேலை நாள்! – அரபு நாடுகளில் அமல்!

2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் வார விடுமுறை நாட்கள் வெள்ளிக்கிழமை மதியம் தொடங்கி சனி, ஞாயிறு உள்ளிட்ட இரண்டரை நாட்கள் என்று ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்திருந்தது.

வார விடுமுறை நாட்களை மாற்றி அறிவித்த பிறகு முதல் முறையாக இன்று வெள்ளிக்கிழமை வேலைநாளாக அமைந்தது. வளைகுடா நாடுகளில் வெள்ளிக்கிழமை வேலை செய்யும் ஒரே நாடாக ஐக்கிய அரபு நாடு உருவெடுத்துள்ளது, மேற்கத்திய நாடுகளுடன் வர்த்தக ரீதியிலான உறவை மேம்படுத்த இந்த மாற்றம் உதவும் என்று கூறப்படுகிறது.

இருந்தபோதும், வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகையை முடித்து முழுநாள் வீட்டில் இருந்து பழக்கப்பட்டவர்கள் அரை நாள் வேலைக்குச் சென்றுவிட்டு பின் பள்ளிவாசல் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டதால் அவர்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று சுணக்கமாகவே காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!