தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த குரூப் 4 தேர்வில், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வரித்தண்டலா், நில அளவையாளா் மற்றும் கிராம நிர்வாக அலுவலா் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இதனால் 21 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதனிடையே இந்த தேர்வுக்கு இலவச பாடநூல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.டிஎன்பிஎஸ்சி ,விஏஓ தேர்வுகளுக்கான பாடநூல் தொகுப்பு இலவச மாக அனுப்பி வைக்கப்படும் என ஆட்சிதமிழ் ஐஏஎஸ் அகாடமி தெரிவித்துள்ளது.பாடநூல்களை பெறவிரும்புபவர்கள் TNPSC GROUP IV TEXT BOOKS என டைப் செய்து தங்கள் முழு முகவரியுடன் 9176392791 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பிமுன்பதிவு செய்யவும். முன்பதிவு செய்த அனைவருக்கும் டிஎன்பிஎஸ்சி பாடநூல்கள் பிடிஎப் வடிவில் வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வைக்கப்படும்
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இலவச பாடநூல் தொகுப்பு
