• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

இலவச சோப்பு தயாரிப்பு மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி..,

அகமதாபாத் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கி இணைந்து, சங்கல்ப் திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்களுக்கான இலவச கையால் தயாரிக்கப்படும் சோப்பு தயாரிப்பு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சிதிண்டுக்கல் அபிராமி நகரில் நடந்தது.

இந்த பயிற்சி பற்றி இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் தொழில் முனைவு நிபுணர் கே. சரவணன் பயிற்சியின் நோக்கம், பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், அரசு திட்டங்கள் மற்றும் தொழில்முனைவோர் வளர்ச்சிக்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தார். நலம் ஈகோ எலைட்நிர்வாக இயக்குனர் சாந்தகுமார் பெண்கள் தொழில்முனைவோராக உருவாகும் அவசியம் மற்றும் சுயதொழிலின் முக்கியத்துவம் குறித்து ஊக்கமளிக்கும் உரையாற்றினார்.
மேலும், இடி ஐ ஐ அதிகாரிகளான அதிராஜ், அசோக் மற்றும் டாக்டர் எம். கார்த்தி ஆகியோர் பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் 8754753107 என்ற கைபேசி எண்ணிற்கு தங்களது பெயரை குறுஞ்செய்தி அல்லது வாட்சப் மூலம் அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், நேரடியாக பயிற்சி மையத்திற்கும் வந்து பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்று தொழில் முனைவு நிபுணர் சரவணன் தெரிவித்தார்.

இதில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். சுய உதவிக்குழு உறுப்பினர்கள், சிறு மற்றும் குறு தொழில் முனைவோர், சுயதொழில் தொடங்க விரும்பும் பெண்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.