தமிழகத்தில் இனி ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல நலத்திட்ட உதவிகள் அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.4.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இரு கால்கள் பாதிக்கப்பட்டு இரு கைகள் நன்றாக இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் ஒரு கால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஸ்கூட்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.