திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அஷ்தபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து இலவச மருத்துவ முகாம் சங்கத் தலைவர் கண.மோகன் ராஜா தலைமையில் நடைபெற்றது முன்னதாக வருகை தந்த அனைவரையும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் AR.முகமது அப்துல்லா வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் புதுக்கோட்டை ச.பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் R.சங்கர், மற்றும் K.ஓம்ராஜ், TK.மணிகண்டன் அப்பல்லோ மருத்துவமனை திருச்சிராப்பள்ளிமக்கள் தொடர்பு அலுவலர்கள் விஜயகுமார் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சுபலட்சுமி முகாம் மருத்துவராக கலந்து கொண்டு சிறப்பித்தார் நிகழ்ச்சிகள் 300 பேர் பயன் பெற்றனர்.







