தேனி மாவட்டம் கம்பத்தில் தேனி தெற்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பாகவும் மற்றும் கம்பம் நகரம் சார்பாகவும் தனியார் மண்டபத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

மருத்துவ முகாமில் தேனி தெற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் முகுந்தன் தலைமையில் கம்பம் நகர சார்பாக நடைபெற்றது.
தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்த முகாமில் இருதய நோய், சர்க்கரை, நுரையீரல், தோல் நோய், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவம், பல், பொது மருத்துவம், போன்ற நோய்களுக்கான சிறந்த டாக்டர்கள் கொண்டு இந்த முகாம் நடைபெற்றது .
வருகின்ற 21 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ள சூழ்நிலையில் கம்பம் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த முகாமில் தமிழக வெற்றி கழகத்தில் நகரம் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.








