திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று மருத்துவ உதவிகள் பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்ன கரட்டுப்பட்டியில் புதிய சகாப்தம் மற்றும் சார்ஜர் அறக்கட்டளை மதுரை ராக்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகமானது நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் சின்ன கரட்டு பட்டியை சுற்றியுள்ள சாமியார் புதூர், பெரிய கோட்டை, பெரிய கரட்டு பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இருந்து சசுமார் 500 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். இந்த இலவச மருத்துவ முகாமில் பங்கேற்ற கிராம மக்களுக்கு இருதய வீக்கம் ,இருதய படபடப்பு சிகிச்சைகள், நுரையீரல் நிமோனியா, ஆஸ்துமா சிகிச்சைகள், கல்லீரல் , கணையம் ஏபிசி, வைரஸ் சிகிச்சைகள், சர்க்கரை நச்சுத்தன்மை சிகிச்சைகள் ,நாள்பட்ட இளைப்பு, மூச்சுத் திறனலுக்கான சிகிச்சைகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டது.



இங்கு சிகிச்சை பெற்ற கிராம மக்களுக்கு மதுரையில் உள்ள ரக்ஸ் மருத்துவமனையில் முற்றிலமாக இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இந்த இலவச மருத்துவ முகாமில் கிராமத்தை சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று பயனடைந்தனர். இந்த இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சியினை SS டெக்னாலஜி சார்பாக நடத்தினர்.


