• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கீரனூர் அருகே இலவச மருத்துவ முகாம்..,

Byமுகமதி

Jun 23, 2026

இந்திய மருத்துவச் சங்கம் புதுக்கோட்டை கிளை, டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கியூரிஸ் மருத்துவமனை திருச்சி இணைந்து கீரனூர் அருகே உள்ள விசாலூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கிராமத் தத்தெடுப்பை கருப்பொருளாகக் கொண்டு “வாருங்கள் கிராமத்திற்குச் செல்வோம்” என்ற இலக்கை முன்னிட்டு இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய மருத்துவச் சங்கம் புதுக்கோட்டையின் கிளைத் தலைவர் டாக்டர்.அனிதா தனசேகரன், செயலாளர் டாக்டர். மாலா சங்கர், நிதிச் செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், தனியார் மருத்துவமனைகள் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே.எச்.சலீம், நுரையீரல் சிறப்பு மருத்துவர் டாக்டர் தனசேகரன், டாக்டர் பரமேஸ்வரி கதிரியக்க புற்றுநோய் நிபுணர் மற்றும் ஆலியா இருக்கை மருத்துவர் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த மருத்துவ முகாமில் ரத்த அழுத்தப் பரிசோதனை, இதயச் சுருள் படம் பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை ஆகியன செய்யப்பட்டன.

தொற்றா நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் பற்றியும், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இம்முகாமை டீம் மருத்துவமனை துணை மேலாளர் ஷேக் அப்துல் காதர், ஆறுமுகம் மற்றும் கியூரிஸ் மருத்துவமனை துணை மேலாளர் தனவேந்தன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.