கன்னியாகுமரி பழத்தோட்டம் எதிரே உள்ள கந்தசாமி மருத்துவமனை, வசந்தம் மருத்துவமனை, கலப்பை மக்கள் இயக்கம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் இன்று (மே_1)ம் தோதி நடைபெற்றது.

இம்மருத்துவ முகாம் தொடக்க நிகழ்வுக்கு கந்தசாமி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பாபுராஜன் தலைமை வகித்தார். டாக்டர் தனலெட்சுமி முன்னிலை வகித்தார். கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், தென்குமரி கல்விக்கழக தலைவருமான பி.டி.செல்வகுமார் மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். தொடக்க நிகழ்வில், மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் வழக்குரைஞர் டி.பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் சிவராஜன், கொட்டாரம் பேரூர் தலைவர் ரகுபதி மற்றும் நிர்வாகிகள் சம்பூர்ண தேராஜன், வரலெட்சுமி, அனிதா, கோயில்பிள்ளை, கார்மல், செந்தில்மோகன், செந்தில், முருகன், கணபதி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி கந்தசாமி மருத்துவ நிர்வாகம் சார்பில் மருத்துவர்
திருமதி.தனலெட்சுமி, கலப்பை அமைப்பு ஸ்தாபகர் திரைப்பட தயாரிப்பாளர்.
பி.டி.செல்வகுமாருக்கு நினைவு பரிசு வழங்கினார்.