ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் இயங்கும் ஒன்பது அரசு பள்ளிகளில் பயிலும் 959 மாணவ மாணவிகளுக்கு லயன் டேட்ஸ் நிறுவனத்தின் மூலம் சுமார் 2.81 லட்சம் மதிப்புடைய லயன் டேட்ஸ் சிரப் இலவசமாக வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு ஊட்டச்சத்து சிரப் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் வழங்கினார் உடன் துணைத் தலைவர் செல்வமணி, நகராட்சி ஆணையாளர் பிச்சைமணி, திரு வி கா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளா மற்றும் லயன் டேட்ஸ் நிறுவனத்தின் மேலாளர் முத்துராஜ் ஆகியவர்கள் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக டேட்ஸ் சிரப் வழங்கினார்கள்.
