• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இனி இலவச பஸ் பயணம்…

Byகாயத்ரி

Jul 16, 2022

இனி அரசு சார்ந்த பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு குஷி தான். அரசு பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படுகிறது. இருப்பினும் மாணவர்களை பாதி வழியில் இறக்குவது, நேரத்துக்கு கொண்டு செல்லாமல் இருப்பது போன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. இதன் காரணமாக மாணவர்களுக்கும், ஓட்டுனர், நடத்துனர்களுக்கும் இடையே தகராறுகள் நடக்கிறது. இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான இலவச பஸ்பாஸ் வழங்க, கல்வி நிறுவனங்களிடம் தகவல்களை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது.

இலவச பஸ்பாஸ் வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஓட்டுநர்கள், நத்துனர்கள் மாணவர்களை ஏமாற்றுகின்றனர். இந்நிலையில் சீருடை அணிந்த அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்களை பேருந்திலிருந்து இறக்க கூடாது. அவர்களின் பழைய பஸ்பாஸ், கல்வி நிறுவன அடையாள அட்டை இருந்தால் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும். இதனை மீறினால் நடத்துனர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.