கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலினுக்கு சமீபத்தில் கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் சென்னையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வரின் உடல்நலம் குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் “கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை நன்றாக உள்ளது” என்று கூறியுள்ளார். மேலும் குரங்கம்மை நோய் குறித்து பேசியுள்ள அவர் தமிழ்நாட்டில் குரங்கம்மை தொற்று இதுவரை யாருக்கும் தென்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.