இனி மூத்த குடிமக்கள் விமானத்தில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என மத்திய பிரதேச மாநில அரசு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், மூத்த குடிமக்களுக்கு இலவச விமானப் பயணம் வழங்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை மத்திய பிரதேசம் பெற்றுள்ளது. ‘முதல்வர் தீர்த்ததர்ஷன் யோஜனா’ என்ற திட்டத்தின் மூலம் போபாலில் இருந்து பிரயாக்ராஜ் வரை 32 பேர் பயணித்தனர். இந்த திட்டத்தை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார். புனித யாத்திரை மேற்கொள்ளும் முதியவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர்.
இதுவரை, 7.82 லட்சம் மூத்த குடிமக்கள் புனித யாத்திரை திட்டத்தின் பலனைப் பெற்றுள்ளனர். விமானப் பயண வசதியின் முதல் கட்டத்தின் கீழ், மாநிலத்தின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை எம்.பி.யில் இருந்து மூத்த குடிமக்கள் வௌ;வேறு தொகுதிகளில் விமானத்தில் பயணம் செய்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூத்த குடிமக்களுக்கு இலவச விமானப் பயணம்..,மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு..!








