• Fri. Apr 26th, 2024

பூங்கா அமைப்பதில் மோசடி! நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

By

Aug 31, 2021 , ,

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் கடந்த 2017 – 20 ஆம் ஆண்டில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் 4 இடங்களில் பூங்காக்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் நாகர்கோவில் அருகே புளியடி என்ற இடத்தில் 91 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது

மக்கள் இல்லாத இந்தப் பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டதால் மக்கள் செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் பணத்தை வீணடித்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .பூங்கா என்ற பெயரில் அங்கு எந்த பணிகளும் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், பூங்கா பயன்பாட்டுக்கு வராத நிலையிலேயே அங்கு கட்டப்பட்ட கட்டுமானங்களும் இடிந்து விழ தொடங்கி உள்ளதாகவும்,

மேலும் ,நடமாட்டம் இல்லாத இந்த பகுதியில் பூங்கா அமைக்க அதிகாரிகள் முன்வந்தது ஏன் எனவும் மத்திய அரசின் நிதி முழுமையாக செலவிடப்பட்டதா ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது

இதனை முழுமையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *