


பா.ஜ.க நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் மேலும் நான்கு பேர் கைது செய்த காவல் துறையினர் !!!
கோவை, செல்வபுரம் போலீசார் தினேஷ் பாபு தலைமையில் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரது பைக்கில் பிளாஸ்டிக் பாட்டிலில் தயார் செய்யப்பட்ட 2 பெட்ரோல் குண்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் பெட்ரோல் குண்டை பறிமுதல் செய்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் செல்வபுரம் சிவாலயா பகுதியை சேர்ந்த நாசர் (38) என்பது தெரியவந்தது, இவர் பா.ஜ.க ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தெற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் மணிகண்டன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச சென்று கொண்டு இருந்ததும் காவல் துறையின் விசாரணையில் தெரியவந்தது . உடனே போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது
பா.ஜ.க ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தெற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். பிடிபட்ட நாசருடைய அண்ணன் மணிகண்டனின் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பேப்ரிகேஷன் வேலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்து இருந்தார். அந்த நேரத்தில் நாசர் அங்கு வந்து சென்று உள்ளதாக கூறப்படுகிறது.


நாசர் பணம் பறிக்கும் நோக்கத்துடன் ரியல் எஸ்டேட் அதிபர் மணிகண்டனிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரில் சென்று ரூ. 5 ஆயிரம் கடன் கேட்டு உள்ளார்.
ஆனால் மணிகண்டன், அவருக்கு கடன் தராமல் இருந்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நாசர் நேற்று முன்தினம் ஆசாத் நகர் பகுதியில் தனது நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். அப்போது அவரது நண்பர்கள் பணம் கடனாக தராத மணிகண்டனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என கூறி உள்ளனர். அவர்கள் 200 பணத்தை கொடுத்து பெட்ரோல் வெடிகுண்டு தயார் செய்து, மணிகண்டன் அலுவலகம் மீது வீசினால் தான் சரி வரும் என கூறி இருக்கின்றனர். பின்னர் பெட்ரோல் வெடிகுண்டை தயார் செய்து வரும் போது, போலீசார் சோதனையில் நாசர் பிடிபட்டது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் நாசருக்கு பெட்ரோல் வெடிகுண்டு தயாரித்து வீச திட்டமிட்டு கொடுத்ததாக கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் ஃபைசல் ரகுமான் (30) கரும்பு கடையை சேர்ந்த காஜா உசேன் என்பவரின் மகன் ஜாகிர் உசேன் (35) அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரின் மகன் இதயத்துல்லா( 36 ) ஆசாத் நகர் பகுதியைச் சேர்ந்த சையத் அலி என்பவரின் மகன் முகமது ஹர்ஷத் ( 34) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நாசர் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரையும் சேர்த்து ஐந்து பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


