புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு நான்கு வழி சாலை மற்றும் இந்திரா காந்தி சிலையிலிருந்து ராஜீவ் காந்தி சிலை வரை மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ஆயிரம் கோடி வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாக சட்டமன்றத்தில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல்நாள் என்பதால் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையாற்ற சட்டமன்றத்திற்கு வருகை புரிந்தார். அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, சபாநாயகர் செல்வம் பூங்கொத்துக் கொடுத்த வரவேற்று சட்டமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு திருக்குறளுடன் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் தனது உரையை தொடங்கினார்.

துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் உரையில்..,
புதுச்சேரியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மழை நிவாரணம் வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே புதுச்சேரி மாநிலத்தில் தான் உடனடியாக நிவாரண வழங்கப்பட்டதாக முதல் அமைச்சர் ரங்கசாமிக்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.
காலியாக உள்ள பணியிடங்களை நேரடியாக வெளிப்படையாக இந்த அரசு நிறைவேற்றி வருவதாக, பாராட்டு தெரிவித்த ஆளுநர் கைலாசநாதன் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு நான்கு வழி சாலை மற்றும் இந்திரா காந்தி சிலையிலிருந்து ராஜீவ் காந்தி சிலை வரை மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ஆயிரம் கோடி வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவித்தார் .

55 நிமிடங்கள் உரையாற்றிய துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் சட்டமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வழி அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நாளை நடைபெறுகிறது. அதுவரை பேரவையை சபாநாயகர் செல்வம் ஒத்தி வைத்தார்.
காகிதம் இல்லா சட்டப்பேரவை 8.6 கோடி ரூபாய் செலவில் காகிதமில்லா சட்டபேரவையாக புதுச்சேரி சட்டபேரவை மாற்றப்பட்டுள்ளது. வழக்கமாக ஆளுநர் உரைக்கான புத்தகம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். ஆளுநர் பேச துவங்கியதும் உறுப்பினர்கள் தங்கள் முன் இருந்த கையடக்க கணினி தட்டி தட்டி பார்த்தனர். அதில் சட்டமன்ற இன்றைய நிகழ்வு பட்டியல் மட்டுமே இருந்தது. 20 நிமிடங்கள் கழித்து கணினியில் ஆளுநர் உரை வந்தது. அதே நேரத்தில் அனைவருக்கும் பழைய முறைப்படி ஆளுநர் உரை புத்தகம் வழங்கப்பட்டது.

சட்டப்பேரவையில் மூன்றாவது முறையாக ஆளுநர் தமிழில் உரை..,
புதுச்சேரி சட்டமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக தமிழில் ஆளுநர் உரை வாசிப்பு. ஏற்கனவே தமிழிசை சௌந்தரராஜன், C.P.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழில் உரை வாசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.