கோவை, ராம் நகரில் பகுதியில் உள்ள ராமர் கோயில் அருகே நான்கு சக்கர வாகனத்தில் யானை தந்தங்கள் கடத்துவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் வாகன சோதனையில் விடுபட்டனர். அப்போது அந்த வழியாக மேட்டூரில் இருந்து வந்த டாடா நெக்ஸான் என்ற நான்கு சக்கர வாகனத்தில் வந்த சதீஷ்குமார், கிருபா, விஜயன் மற்றும் கௌதம் ஆகிய பேர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
சந்தேகம் அடைந்த வனத்துறையினர். அந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அப்பொழுது அதில் யானை தந்தம், சிறுத்தையின் பற்கள் மற்றும் நகங்கள் விற்க கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதனை கோவையில் விற்க கொண்டு வந்தது வனத் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. கோவை மாவட்ட வனத் துறையினர், வன உயிரின பொருட்களை அவர்களிடம் இருந்து கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
மேலும் வன குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.