• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்!..

Byமதி

Oct 2, 2021

பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் நடந்த பல்வேறு நிகழ்வுகளால் முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு பரபரப்பு நிகழ்வுகள் பஞ்சாபில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ள பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங்கை, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கட்சியின் பஞ்சாப் மாநில பொறுப்பாளருமான ஹரிஷ் ராவத் விமர்சித்து இருந்தார்.

அமித் ஷாவை அமரிந்தர் சிங் சந்தித்ததை முன்வைத்து, அமரிந்தர் சிங்கின் மதசார்பற்ற தன்மையையும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால் ராவத்தின் இந்த விமர்சனம் முட்டாள்தனமானது என அமரிந்தர் சிங் பதிலடி கொடுத்துள்ளார். பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி பரிதாப நிலையில் இருப்பதன் விளைவே ராவத்தின் இத்தகைய கருத்துகளுக்கு காரணமாக இருப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளாா்.