அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா அம்மா கோவிலில் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி சிலைகளுக்கு மாலை அணிவித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் மரியாதை செலுத்தினார்.
அதிமுக கழகம்தொடங்கப்பட்டு 52 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில் 53 வது ஆண்டுதொடக்க விழா நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த டி.குன்னத்தூர் உள்ள அம்மா கோவிலில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் திருவுருவ வெங்கலசிலைகளுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து புரட்சித் தலைவர் புகழ் வாழ்க புரட்சித்தலைவி புகழ் வாழ்க கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என கோஷங்கள் எழுப்பினர்தொடர்ந்து தொண்டர்களிடையே உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தை விட இப்பொழுது தான் அதிகமாக உழைத்து வருகிறது.இன்றைக்கு திமுக சோர்ந்து போய் உள்ளது அதிமுக எழுச்சியாக உள்ளது என்றார்.இந்த 53வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக கட்சி நிர்வாகிகள் திறம்பட செயல்பட்டதால் தான் வளர்ச்சி அடைந்துள்ளது என சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தொடர்ந்து அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழாவையொட்டிபொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.