• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்..!

Byவிஷா

Jan 11, 2024

அதிமுக ஆர்ப்பாட்டக் கூட்டத்தின் போது, முதலமைச்சர் மீது அவதூறாக பேசிய வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அதிமுக ஆர்ப்பாட்ட கூட்டத்தில் செல்லூர் ராஜு தமிழ்நாடு அரசு குறித்தும், முதலமைச்சர் குறித்தும் அவதூறாக பேசியதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.
அதிமுக சார்பில் கடந்த 2023 மே 29ஆம் தேதி மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய செல்லூர் ராஜு, தமிழகத்தில் கள்ளச்சாராய மரணம், கொலை, கொள்ளை நடக்கிறது. பொய் வாக்குறுதிகளை அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என பேசியிருந்தார்.