விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு ஒன்றியம் சுக்கிரவார்பட்டி கழக நிர்வாகி ஜெயம் , எதிர்பாராத விதமாக சாலைவிபத்தில் மரணமடைந்தார் .

இன்றையதினம் அவர்களது இல்லத்திற்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான கே டி ராஜேந்திர பாலாஜி நேரில் சென்று அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அவர்களது குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிவகாசி யூனியன் முன்னாள் சேர்மன் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன் சிவகாசி மாமன்ற உறுப்பினர் சரவண பாண்டியன் உள்பட கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.






