நிலக்கரி கையிருப்பு ஏற்பாட்டில் உள்ள குளறுபடிகள் குறித்து யார் தவறு செய்தாலும் மின்சார துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்கட்டும். மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை என்று முன்னாள் மின்சாரதுறை அமைச்சர் தங்கமணி மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை என ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிமுகவின் உட்கட்சி தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆலாம்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற கூட்டத்தில் முன்னாள் மின்சார துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்று தொண்டர்களுக்கு உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மின்சார துறை அமைச்சர் தங்கமணி.
இன்றைய தினம் வடசென்னை அனல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு நிலக்கரி கையிருப்பில் முறைகேடுகள் நிகழ்ந்து இருப்பதாக தற்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலஜி, முன்பே இது குறித்து ஏற்கனவே நான் ஆய்வு செய்ததில் தெரியவந்தது. இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பதற்கு முன்பு தேர்தல் வந்து விட்டதாக கூறினார்.
கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் 6ம் தேதி ஏற்கனவே நான் எடுத்த கணக்கைத் தான் தற்போது செந்தில் பாலாஜி முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்து நல்ல பெயர் வாங்க முயற்சித்துள்ளார். இதையடுத்து மின்சாரதுறை அமைச்சர் தவறு செய்தவர்கள் யார் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை என்பதால் நானும் வெளிப்படையாக வரவேற்கிறேன். விசாரணைக்கு உட்படுவதாக தெரிவித்தார். ஆகையால் எனது மடியில் கனமில்லை, அதனால் எதற்கும் பயப்படப் போவதில்லை என்று கூறிய முன்னாள் மின்சார துறை அமைச்சர் தங்கமணி, அதிமுக ஆட்சி காலத்தில் எவ்வித தவறும் மின்சார துறையில் நிகழவில்லை என்று தெரிவித்து கொள்கிறேன். திமுக அமைச்சர்கள் வேண்டுமென்றே அதிமுக அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டி வருவதாக தெரிவித்தார்..