புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியின் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன் தனது பிறந்த நாள் விழாவை தொகுதி மக்கள் உடன் இணைந்து பெருமாள் கோவில் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாடினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக மாநில கழக அமைப்பாளருமான சிவா முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் அணிபால் கென்னடி,செந்தில்குமார்,சம்பத் உள்ளிட்ட மாநில கழக நிர்வாகிகள்,தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள். தொகுதி கழக செயலாளர்கள்,மாநில அணிகளின் அமைப்பாளர்கள், முத்தியால்பேட்டை தொகுதி கழக நிர்வாகிகள் மற்றும் தொகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பிறந்தநாள் கொண்டாடிய முன்னாள் எம்எல்ஏ நந்தா சரவணனுக்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட முத்தியால்பேட்டை தொகுதிகளை சார்ந்த சுமார் 10,000 பெண்களுக்கு இலவசமாக நலத்திட்ட உதவிகளும் கறி விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.






; ?>)
; ?>)
; ?>)
