• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

முடுவார்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா..,

ByKalamegam Viswanathan

Feb 24, 2026

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி ஊராட்சி அதிமுக சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்த்துவி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ஜெயச்சந்திரமணியன் தலைமை தாங்கினார். விவசாய அணி மாவட்ட துணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன், இணைச் செயலாளர் வாவிடமருதூர் ஆர்.பி. குமார் கிளைச் செயலாளர் காமாட்சி, மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி கௌதம், ராகுல், பிரவீன், ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

முன்னதாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் பாஜக, பாமக அமமுக தமாக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.