சென்னை வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.
நடப்பாண்டில் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் துவங்குகிறது. இதில் முதல் போட்டியாக கொல்கத்தா அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது,
இரண்டாவது போட்டியாக சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன,
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய வீரருமான மகேந்திர சிங் தோனி முன்னதாகவே பயிற்சியில் ஈடுபட ராஞ்சியில் இருந்து விமான மூலம் சென்னை வந்துள்ளார்,
சென்னை விமான நிலையத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மகேந்திர சிங் தோனிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் சி. எஸ். கே., சி. எஸ். கே. என ரசிகர்கள் கோஷங்களை எழுப்பினர்,
இதையடுத்து விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு மகேந்திர சிங் தோனி புறப்பட்டு சென்றார்.