பாஜக நாகை மாவட்ட முன்னாள் தலைவர் கார்த்திகேயன் மகன் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம் ; புதிய மாவட்ட பாஜக தலைவர் அறிவித்ததால் அதிருப்தியில் உள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட முன்னாள் தலைவர் கார்த்திகேயன் உடல் நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் அவருடைய மகன் பாஜக தொழில்துறை பிரிவில் மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்தார்.
இதனிடையே தனது தந்தையின் பதவிக்கு திருசுகன் முயற்சி செய்து வந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட தலைவராக விஜேந்திரன் என்பவர் அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த திருசுகன் அமைச்சர் அன்பில் மகேஷ், திமுக நாகை மாவட்ட செயலாளர் கவுதமன் ஆகியோர் முன்னிலையில் இன்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.