• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆட்டோக்களில் சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகள்

17 ஆட்டோக்களில் கன்னியாகுமரி வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.சென்னையில் உள்ள சுற்றுலா நிறுவனம் ஒன்று கடந்த 16 வருடங்களாக வெளிநாட்டினர் பங்கு பெறும் “ஆட்டோ சேலஞ்ச்” என்றஆட்டோ சுற்றுலா பயணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது.கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு “ஆட்டோ சேலஞ்சு” என்ற சுற்றுலா பயணம் கடந்த 28-ந்தேதி சென்னையில் தொடங்கியது.இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, எஸ்தோனியா, போலந்து ஆகிய 8 நாடுகளை சேர்ந்த 37 பேர் கலந்துகொண்டு 17 ஆட்டோக்களில் 17 அணிகளாக பிரிந்து புறப்பட்டனர். அவர்களாகவே ஆட்டோக்களை ஓட்டி சென்று சுற்றுலாத் தலங்களை சுற்றிப்பார்த்தனர்.
சென்னையில் இருந்து புறப்பட்ட இவர்கள் புதுச்சேரி, தஞ்சை, மதுரை, ராஜபாளையம், தூத்துக்குடி, வழியாக நேற்றுமாலை கன்னியாகுமரிவந்தனர். மொத்தம் உள்ள 1200 கிலோமீட்டர் தூரத்தை 9 நாட்களில் கடந்து கன்னியாகுமரி வந்து சேர்ந்தனர்.