• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்களை ஏற்றி சென்றதாகவும் இனி இவ்வாறு செயல்பட மாட்டோம்..,

BySeenu

Jun 30, 2026

கோவையில் செய்தியாளர்களை சந்திந்த ஒருங்கிணைத்த டிப்பார் லாரி உரிமையாளர்கள் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை முன் வைத்துள்ளனர் .
கோவை மாவட்டத்தில் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்களுக்காக 2000 டிபபர் லாரிகளை அதன் உரிமையாளர்கள் இயக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் அழுத்தஙக்ள் மற்றும் அரசு நிர்வாகத்தில் நட்ந்த முறைகேடுகள் காரணமாக போக்குவரத்து சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக அதிக மெட்ரிக் டன் கனிம வளங்களை ஏற்றி சென்றதாக தெரிவிக்கும் டிபபர் லாரி உரிமையாளர்கள். தற்போதைய அரசு சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வலியுறுத்தும் விதமாக அண்மையில் 33 லாரிகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

இதன் காரணமாக இத்தனை ஆண்டுகளாக ஆண்ட கட்சிகளின் முறைகேடுகளுக்கு வேறு வழியின்றி இயக்கிய தாங்கள் இனி இவ்வாறு செயல்பட மாட்டோம் என குவாரி உரிமையாளர்களிடம் தெரிவித்தால் அவர்கள் அதனை ஏற்க மறுப்பதால் , சட்டபூர்வமாகவே இனி செயல்பட விரும்புவதை வலியுறுத்தும் விதமாக 3 நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள் இத்தனை ஆண்டுகளாக தாங்கள் செய்த தவறை இனி செய்யமாட்டோம் என பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.