

முதன்முறையாக அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாம் – ஐடி நிறுவனங்கள் முதல் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் வரை ஏராளமான நிறுவனங்கள் , இளைஞர் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதன்முறையாக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில், மதுரை, திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐடி நிறுவனங்கள் முதல் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் வரை 20க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கு பெற்று, வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்ற 1500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு நேர்முக தேர்வு நடத்தி, 180 பேருக்கு உடனடியாக பணி ஆணை வழங்கி சிறப்பித்தனர்.
இங்கு நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில், திருமங்கலம், கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப்புற பகுதியில் இருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் பங்கு கொண்டனர்.


