• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டிப்ளமோ முடித்தவர்களுக்கு, அணு சக்தி ஆராய்ச்சி நிலையத்தில் வேலை!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் :

Scientific Assistant-C (Safety Supervisor) – 03
Nurse-A – 02
Assistant Grade-1(HR) – 13
Assistant Grade-1(F&A) – 11
Assistant Grade-1(C&MM) – 04
Steno Grade-1 – 09

மொத்தமாக 42 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
Scientific Assistant-C (Safety Supervisor) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Nurse-A பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

Assistant Grade-1(HR), Assistant Grade-1(F&A), Assistant Grade-1(C&MM), Steno Grade-1 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 21 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
Scientific Assistant-C (Safety Supervisor) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் Mechanical / Electrical பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Physics, Chemistry & Mathematics பாடப்பிரிவில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Nurse-A பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் 12ம் வகுப்புக்கு பிறகு 3 ஆண்டுகள் Nursing & Midwifery பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது B.Sc. (Nursing) முடித்தவராக இருக்க வேண்டும்.

Assistant Grade-1(HR), Assistant Grade-1(F&A), Assistant Grade-1(C&MM), Steno Grade-1 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.

அனுபவம் :
Scientific Assistant-C (Safety Supervisor) பணிக்கு விண்ணப்பதாரர்கள் Diploma / Certificate in Industrial Safety ல் ஒரு வருடம் அல்லது பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 4 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Nurse-A பணிக்கு விண்ணப்பதாரர்கள் Nursing ‘A’ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் மருத்துவமனைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் :
Scientific Assistant-C (Safety Supervisor) மற்றும் Nurse-A பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.44,900/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Assistant Grade-1(HR), Assistant Grade-1(F&A), Assistant Grade-1(C&MM), Steno Grade-1 பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.25,500/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

தேர்வு செய்யும் முறை :

Written Exam
Skill Test
Interview

விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 02.03.2022