மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியை அடுத்த சதுர்வேத மகா கணபதி ஆலயத்தில் 27 ஆம் ஆண்டு பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

இருளப்பன் என்பவரது தலைமையில் நடைபெற்ற அன்னதானத்தை விவேகானந்தா கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். சோழவந்தான் கணேச பட்டர் சதுர்வேத மகா கணபதிக்கு பால் தயிர் வெண்ணெய் நெய் பஞ்சாமிர்தம் இளநீர் மஞ்சள் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அர்ச்சனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் சோழவந்தான் திருவேடகம் தச்சம்பத்து மேலக்கால்
உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் உண்டு மகிழ்ந்தனர்.




