ஆங்கில புத்தாண்டு பிறப்பை உலகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு சென்று சிறப்பு தரிசனமும் மக்கள் செய்து வருகின்றனர்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டும், கோவில்களில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கியத்துவம் வாய்ந்த பூக்களின் விலை கணிசமான உயர்ந்துள்ளது.
அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் மல்லிகை – 2 ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை 1000 ரூபாய்க்கும், பிச்சி 800 ரூபாய்க்கும், கனகாம்பரம் மற்றும் காக்கரட்டான் 600 ரூபாய்க்கும், அரளி 300 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 250 ரூபாய்க்கும், சம்மங்கி, மரிக்கொழுந்து மற்றும் பன்னீர் ரோஸ் 150 ரூபாய்க்கும், செவ்வந்தி 100, கோழிக்கொண்டை 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.,




