காரைக்கால் மாவட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்புகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து கண்டு கொள்ளாத சட்டமன்ற உறுப்பினர்களை கண்டித்தும், அரசு வேலைகளில் காரைக்காலுக்கு பிராந்திய இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசை வலியுறுத்தியும், காரைக்கால் மக்கள் போராட்ட குழு சார்பில் கருப்பு கொடி ஏந்தி குரல் எழுப்பும் போராட்டம் நடைபெற்றது.

காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கருப்பு கொடி ஏந்தி குரல் எழுப்பும் போராட்டத்தில் காரைக்கால் மக்கள் போராட்ட குழுவினர் அன்சாரிபாபு, பன்னீர்செல்வம், சூர்யா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்ககளை எழுப்பி போராட்டத்தில் ஈடுட்டனர்.