• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடி பயணம்

ByKalamegam Viswanathan

Jan 1, 2025

மதுரை வில்லாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடி பயணம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கொடி பயண நிகழ்ச்சி துவக்கி வைத்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்ஸிஸ்ட் சார்பில்கட்சியின் 24 வது தமிழ் மாநில மாநாடு வருகிற ஜனவரி 3 4 5 தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறுகிறது அதனை ஒட்டி மதுரை வில்லாபுரத்தில் தோழர் தியாகிகளை நினைவாக கொடிப்பயணம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, லெனின் தலைமை வகித்தார். பாண்டிய ராஜன் முன்னிலை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடியினை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வழங்கினார். திண்டுக்கல் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன் மாவட்ட செயலாளர்கள் கணேசன் மாநில குழு உறுப்பினர் பொன்னுத்தாயி விஜயராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கூறும் போது.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தியாகிகளைத் தந்த கட்சி நாட்டிற்காக இரத்தத்தை சிந்தியவர்கள், குண்டடிபட்டு, சமுக போராட்டத்தில் தனது இன்னுயிரை தந்தவர்கள் .

அவர்களின் வழியில் தியாகி லீலாவதி சமூக வீரோதிகளின் தாக்குதலில் தனது குருதி சிந்தி இன்னுயிரை இழந்த இந்த மண்ணிலிருந்து கொடி பயணம் துவங்குகிறது என பேசினார்.

பின்னர் கொடி பயணத்தை துவக்கி வைத்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

வருகின்ற மூன்றாம் தேதியில் இருந்து ஐந்தாம் தேதி வரை விழுப்புரம் நகரத்தில் செங்கொடி மாநாடு நடைபெற இருக்கிறது .

அந்த மாநாட்டிலே ஏற்றப்பட இருக்கின்ற செங்கொடி என்பது மதுரையிலே இருந்து தியாகி லீலாவதி அவர்களுடைய இந்த வில்லாபரத்தில் அவர்களின் குருதி சிந்திய இந்த மண்ணிலே இருந்து இந்த செங்கொடியை எடுத்து தந்து இன்றைக்கு முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மாநில செயற்கு மு உறுப்பினர் பாலபாரதி அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை அவர்களும் எடுத்துச் செல்ல இருக்கின்றார்கள்.

இன்றைய அரசியல் சூழல் உழைக்கும் மக்களினுடைய அரசியலை முன்னெடுப்பது சமூக விடுதலைக்கான குரலை , அரசியலில் அடிமைப்படுத்துவதிலிருந்து விடுதலைகாக எங்களது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு மூன்று நாட்கள் விழுப்புரத்தில் நடைபெறுகிறது.

பாஜக அண்ணாமலை செருப்பு அணியாமல் தன்னை வருத்துவது குறித்த கேள்விக்கு?

ஒரு மாநில மாநாடு உழைக்கும் மக்களுடைய ஒரு மகத்தான விஷயத்தைப் பற்றி நான் பேசிக் கொண்டிருக்கிற பொழுது, அது பொருட்படுத்துகின்ற விசயமும் அல்ல அவற்றை நாம் பொருட்படுத்தி பேசவேண்டிய அவசியமும் அல்ல என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கூறினார்.