• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்..,

ByKalamegam Viswanathan

Apr 29, 2025

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழாவுக்கு கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொடியேற்றம் வைபவத்தில், மதுரை மேயர் இந்திராணி, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை நகர் காவல் ஆணையாளர் டாக்டர் லோகநாதன், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் மற்றும் கோயில் இணையர் கிருஷ்ணன் மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை வைகை நதியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறவுள்ளது.
இதில் பல லட்சம் வைகை ஆற்றில் திரண்டு கள்ளழகரை தரிசித்து விட்டு செல்வது வழக்கமாக உள்ளது. அன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் சிறப்பு நகரப் பேரூந்துகள் இயக்கப்படும்.